24th October 2020

புல்லரிப்பு ஏற்படும் போது நம் உடலினுள் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா?

7 days ago
20

நம் உடலே ஒரு அதிசயம் என்று சொல்லலாம். ஆமாங்க தினம் தினம் நம் உடலில் ஏகப்பட்ட மாற்றங்களும் ஆச்சர்யங்களும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. கோடிக்கணக்கான பழைய செல்கள் அழிகின்றன, புதுப்பிக்கப்படுகின்றன, மில்லியன் கணக்கான நரம்புகள் வேலைகள் செய்கின்றன இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அப்படி ஆச்சர்யமான ஒரு விஷயம் தான் நமக்கு புல்லரிப்பது.

நீங்கள் குளிர்ச்சியாக உணரும்போது, ​​நீங்கள் பயப்படும் போது அல்லது நீங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கும் போது இந்த மாதிரியான புல்லரிப்பை பெறுவீர்கள். அப்படியே தோல் சிலிர்த்துக் கொண்டு சிறிய சிறிய புடைப்புகள் தோன்றும். பார்ப்பதற்கு இறகுகள் நீக்கிய கோழியின் தோல் போன்று இருக்கும். இதை கூஸ்பம்ப்ஸ் என்று அழைக்கின்றனர். இந்த புல்லரிப்பு பொதுவாக கைகளின் கீழ்ப்பகுதியில் ஏற்படக் கூடும்.

பைலோரெக்ஷன், க்யூட்டிஸ் அன்செரினா மற்றும் ஹார்பிபிலேஷன் என்றும் மருத்துவ ரீதியாக இதற்கு பெயரிடுகின்றனர். பயம், மகிழ்ச்சி, குளிர், சோகம் மற்றும் பாலியல் விழிப்புணர்வு ஆகியவற்றின் தீவிர உணர்வை நீங்கள் அனுபவிக்கும் போது இந்த மாதிரியான புல்லரிப்பு புடைப்புகளை பெறுவோம். சில நேரங்களில் இது எந்த காரணமும் இல்லாமல் கூட நிகழலாம். இந்த புல்லரிப்புக்கும் நம் உணர்ச்சிக்கும் இடையே ஏகப்பட்ட சம்பந்தங்கள் உள்ளன. ஆழ்ந்த உணர்ச்சி அனுபவங்களை அனுபவிக்கும் போது இந்த மாதிரி ஏற்படுகிறது.

ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் இந்த புல்லரிப்பு மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் ஏற்படுகின்றன. குறிப்பாக நாய்கள், குரங்குகள் மற்றும் முள்ளம் பன்றிகள் இந்த தோல் புல்லரிப்பை பெறுகின்றன. சரி வாங்க இது எப்படி ஏற்படுகிறது, நம் உடல் இதற்கு எப்படி மாற்றம் அடைகிறது என்பதை பார்ப்போம்.

நமது உடலில் உள்ள ஒவ்வொரு முடியின் வேரிலும் அரெக்டர் பில்லி என்று அழைக்கப்படும் ஒரு சிறிய தசை சூழ்ந்துள்ளது. இந்த சிறிய தசை இறுகும்போது, ​​தோலில் சிறிய புடைப்புகள் தோன்றும். இந்த இறுக்கம் நாம் அதிக உணர்ச்சி வசப்படும் போது ஏற்படுகிறது. பிறகு உணர்ச்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக தளரும் போது புடைப்புகள் மறைந்து விடுகின்றன.

நமது உடல் குளிர்ச்சியாக இருக்கும் போது அல்லது நாம் குளிரால் நடுங்கும் போது, ​​மயிர்க்கால்களின் முடிவில் அமைந்துள்ள சிறிய தசைகள் சுருங்கி, முடி எழுந்து நிற்கும். புல்லரிப்பு ஏற்படும். இது ஏன் ஏற்படுகிறது என்றால் நமது மூளை உடலை சூடாக்குவதற்கு எதாவது செய்யுங்கள் என்று எச்சரிக்கிறது. உங்கள் உடம்பை சூடேற்றியதும் இந்த புல்லரிப்புகள் போய் விடும்.

நாம் சோகம், பயம், மகிழ்ச்சி அல்லது பாலியல் ஆசை போன்ற தீவிரமான உணர்ச்சிகளை அனுபவிக்கும் போது, ​​உடல் இரண்டு வெவ்வேறு வழிகளில் அதை வெளிப்படுத்துகிறது. முதலாவதாக, தோலின் கீழ் உள்ள தசைகளில் மின் செயல்பாடுகளில் அதிகரிப்பு ஏற்படும். இரண்டாவதாக, உங்கள் சுவாசம் கனமாகும். இந்த இரண்டு நிகழ்வுமே நமது தோலில் புல்லரிப்புகளை ஏற்படுத்தக் கூடும். நீங்கள் உணர்ச்சிப்பூர்வமான ஒரு படத்தைப் பார்க்கும் போதோ அல்லது உணர்ச்சிப்பூர்வமான சமூக தூண்டுதல்களைப் பார்ப்பது அல்லது உணர்ச்சிபூர்வமான ஒன்றைக் கேட்பது கூட புல்லரிப்புகளை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்த புல்லரிப்பு தற்காலிகமானதாக இருக்கும். அவை சில விநாடிகளில் போய் விடும். அப்படி இல்லையென்றால் நீங்கள் எடுத்துக் கொள்ளும் கடுமையான மருந்துகளின் விளைவாகக் கூட இது ஏற்படலாம். இது உங்கள் தோல் அதிகப்படியான கெரோட்டினை உருவாக்கும் போது ஏற்படும் ஒரு பொதுவான தோல் நிலை. இது சருமத்தை தொற்று நோயிலிருந்து பாதுகாக்கிறது. இந்த கரோட்டீன் செதில் செல்களை உருவாக்கி மயிர்க்கால்களை அடைக்கும் போது புல்லரிப்பு ஏற்படும்.

இது ஒரு நீண்டகால மூளைக் கோளாறு ஆகும். இது மூளை உயிரணு செயல்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தும் நிலை. இதன் விளைவாக வலிப்பு ஏற்படுகிறது. இந்த நோயின் அறிகுறிகளாக புல்லரிப்புகள், தீவிர மகிழ்ச்சி, அடிவயிற்றில் உணர்வு, தேஜாவு, பதட்டம் போன்ற உணர்வுகள் சில விநாடிகள் வரை நீடிக்கும். இது தன்னிச்சையான நரம்பு மண்டலம் வெளிப்புற தூண்டுதல்களுக்கு வெளிப்பாடான ஒரு நிலை. வியர்வை, அதிக குளிரை உணரும் போது புல்லரிப்புகள் ஏற்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

October 2020
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031