30th July 2021
  • ராசிபலன்
  • இன்றைய தினப்பலன்கள் (16.10.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

இன்றைய தினப்பலன்கள் (16.10.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

10 months ago
92
  • ராசிபலன்
  • இன்றைய தினப்பலன்கள் (16.10.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

உறவினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். வாகன பயணங்களின் போது சற்று விழிப்புணர்வு வேண்டும். நெருக்கமானவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து மனம் மகிழ்வீர்கள். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
அஸ்வினி : அனுசரித்து செல்லவும்.
பரணி : மனம் மகிழ்வீர்கள்.
கிருத்திகை : நன்மையான நாள்.
ரிஷபம் :

முயற்சிக்கேற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். உயர் அதிகாரிகளால் செய்யும் காரியங்களில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். மக்கள் தொடர்பான துறையில் இருப்பவர்களுக்கு மதிப்புகள் உயரும். குலதெய்வ வழிபாடு மற்றும் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்
கிருத்திகை : முன்னேற்றமான நாள்.
ரோகிணி : மதிப்புகள் உயரும்.
மிருகசீரிஷம் : பிரார்த்தனைகள் நிறைவேறும்.

மிதுனம் :

குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையினால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். நண்பர்களின் உதவியின் மூலம் பொருளாதார மேன்மை ஏற்படும். மனை தொடர்பான செயல்பாடுகளின் மூலம் இலாபம் அதிகரிக்கும். விவசாய பணிகளில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இலாபமும், ஆதரவும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.
திருவாதிரை : மேன்மை உண்டாகும்.
புனர்பூசம் : இலாபம் அதிகரிக்கும்.

கடகம் :

மனதில் தோன்றும் புதிய சிந்தனைகளை செயல்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படலாம். இளைய சகோதரர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கலாம். சிறு தூர பயணங்களை மேற்கொள்வதன் மூலம் மனதில் அமைதியும், புத்துணர்ச்சியும் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : காரியசித்தி உண்டாகும்.
பூசம் : அனுசரித்து செல்லவும்.
ஆயில்யம் : புத்துணர்ச்சி உண்டாகும்.

சிம்மம் :

குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பதன் மூலம் நன்மை உண்டாகும். மனதில் இருக்கும் விஷயங்களை யாரிடத்திலும் பகிராமல் நிதானம் காட்டுவது உங்களின் மீதான நம்பிக்கையையும், மரியாதையையும் மேம்படுத்தும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சலும், இலாபமும் உண்டாகும். தொழில் தொடர்பான புதிய முதலீடுகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
மகம் : விவாதங்களை தவிர்க்கவும்.
பூரம் : நிதானம் வேண்டும்.
உத்திரம் : முதலீடுகள் அதிகரிக்கும்.

கன்னி :

சபை தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக மனதில் இருந்துவந்த குழப்பங்களுக்கு தெளிவு கிடைக்கும். புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு குழப்பமான சூழ்நிலையும், மனநிலையும் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திரம் : ஆதரவான நாள்.
அஸ்தம் : தெளிவு கிடைக்கும்.
சித்திரை : குழப்பமான நாள்.

துலாம் :

புதிய தொழில் தொடர்பான பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அரசு தொடர்பான காரியங்களில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். வேலையாட்களிடம் தேவையற்ற கருத்துக்கள் பகிர்வதை தவிர்க்கவும். வெளியூர் தொடர்பான வேலை வாய்ப்புகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கி சுபச்செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
சித்திரை : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
சுவாதி : நிதானம் வேண்டும்.
விசாகம் : தாமதங்கள் நீங்கும்.

விருச்சிகம் :

உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பெரியோர்களின் வழிகாட்டுதலின் மூலம் நன்மை உண்டாகும். நிர்வாகம் தொடர்பான பணிகளில் செய்யும் மாற்றங்களின் மூலம் அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
விசாகம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.
அனுஷம் : நன்மை உண்டாகும்.
கேட்டை : பாராட்டுகள் கிடைக்கும்.

தனுசு :

சுரங்கம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு இலாபமும், புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்துவந்த நிலுவை தொகைகள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். மற்றவர்களுக்கு கடன் தொடர்பான உதவிகளை செய்யும் பொழுது சிந்தித்து செயல்பட வேண்டும். வாழ்க்கை துணைவர் வழியின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
பூராடம் : தனவரவுகள் உண்டாகும்.
உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.

மகரம் :

கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமையும், அன்யோன்யமும் அதிகரிக்கும். போட்டிகளில் ஈடுபட்டு பரிசுகளையும், பாராட்டுகளையும் பெறுவீர்கள். உயர் அதிகாரிகளுக்கு உங்களின் மீதான நன்மதிப்பு அதிகரிக்கும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பிரபலமானவர்களின் ஆதரவு மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : தேன் நிறம்
உத்திராடம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
திருவோணம் : நன்மதிப்பு மேம்படும்.
அவிட்டம் : ஆதரவு கிடைக்கும்.

கும்பம் :

உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களின் மூலம் சில மனவருத்தங்கள் நேரிடலாம். பயணங்களின்போது உடைமைகளில் கவனம் வேண்டும். பங்காளி வழி உறவினர்களிடம் பழைய விஷயங்களை பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
அவிட்டம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
சதயம் : மனவருத்தங்கள் நேரிடலாம்.
பூரட்டாதி : கவனம் வேண்டும்.

மீனம் :

வாரிசுகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கும். மனைவியின் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஆதரவான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
உத்திரட்டாதி : தாமதங்கள் நீங்கும்.
ரேவதி : இன்னல்கள் குறையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

July 2021
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031