24th October 2020
  • ராசிபலன்
  • இன்றைய தினப்பலன்கள் (14.10.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

இன்றைய தினப்பலன்கள் (14.10.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

1 week ago
9
  • ராசிபலன்
  • இன்றைய தினப்பலன்கள் (14.10.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். திருமணமான தம்பதிகளுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். தனம் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதம் நீங்கும். இலக்கியம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
அஸ்வினி : கலகலப்பான நாள்.
பரணி : எண்ணங்கள் ஈடேறும்.
கிருத்திகை : தாமதம் நீங்கும்.

ரிஷபம் :

மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றி மறையும். உறவினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நன்மையளிக்கும். தாய்மாமன் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான கடன் உதவிகள் சாதகமாக அமையும். உத்தியோகம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
கிருத்திகை : விவாதங்களை தவிர்க்கவும்.
ரோகிணி : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
மிருகசீரிஷம் : உதவிகள் கிடைக்கும்.

மிதுனம் :

சாதுர்யமான பேச்சுக்களால் சில செயல்களை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சுபகாரியங்களை முன்னின்று நடத்துவதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மிருகசீரிஷம் : அனுகூலம் உண்டாகும்.
திருவாதிரை : சாதகமான நாள்.
புனர்பூசம் : மரியாதை அதிகரிக்கும்.

கடகம் :

கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் வரவும், ஆதரவும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : மனக்கசப்புகள் நீங்கும்.
பூசம் : காரியசித்தி உண்டாகும்.
ஆயில்யம் : ஆதரவு கிடைக்கும்.

சிம்மம் :

தொழில் தொடர்பான அலைச்சல்கள் உண்டாகும். பழைய நினைவுகளின் மூலம் மனதில் இறுக்கமான சூழ்நிலைகள் ஏற்படலாம். மனை தொடர்பான வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். புதிய முதலீடுகளில் சற்று சிந்தித்து செயல்பட வேண்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
மகம் : அலைச்சல்கள் உண்டாகும்.
பூரம் : இலாபம் அதிகரிக்கும்.
உத்திரம் : சிந்தித்து செயல்படவும்.

கன்னி :

குடும்ப பெரியவர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். நிர்வாகம் தொடர்பான முடிவுகளில் அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் ஆரோக்கியமான விவாதங்கள் தோன்றி மறையும். நெருக்கமானவர்களின் ஆரோக்கியத்தில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். புதிய இடங்களுக்கு பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திரம் : ஆதரவான நாள்.
அஸ்தம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
சித்திரை : வாய்ப்புகள் உண்டாகும்.

துலாம் :

எளிதாக முடிக்க வேண்டிய செயல்களை சில அலைச்சலுக்கு பின்பு செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளையும், எண்ணங்களையும் அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கோபங்களை கட்டுப்படுத்தி நிதானமாக சிந்திப்பதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் புதிய சிந்தனைகளின் மூலம் அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
சித்திரை : அலைச்சல்கள் உண்டாகும்.
சுவாதி : முன்னேற்றம் ஏற்படும்.
விசாகம் : பாராட்டுகள் கிடைக்கும்.

விருச்சிகம் :

வியாபாரத்தில் பணியாட்களின் ஒத்துழைப்பு மத்திமமாக இருக்கும். இணைய வர்த்தகம் தொடர்பான பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதலும், அன்பும் உண்டாகும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
விசாகம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
அனுஷம் : முதலீடுகள் அதிகரிக்கும்.
கேட்டை : மாற்றங்கள் ஏற்படும்.

தனுசு :

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், மதிப்புகளும் அதிகரிக்கும். மூத்த உடன்பிறப்புகளின் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். உற்சாகமான மனநிலையுடன் எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். மனதிற்கு நெருக்கமானவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறைவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மூலம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
பூராடம் : அனுகூலமான நாள்.
உத்திராடம் : பிரச்சனைகள் குறையும்.

மகரம் :

உத்தியோகத்தில் மற்றவர்களை எதிர்பார்த்து காத்திருக்காமல் தாங்களே பணிகளை முடிப்பது சிறப்பு ஆகும். வேலையாட்களிடம் நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். பயணங்கள் தொடர்பான சில செயல்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். வியாபாரத்தில் கொடுக்கல், வாங்கல் வசூலாவதில் காலதாமதம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திராடம் : நிதானம் தேவை.
திருவோணம் : கவனம் வேண்டும்.
அவிட்டம் : காலதாமதம் ஏற்படும்.

கும்பம் :

பெற்றோர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வீட்டை புதுப்பிப்பது தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோகத்தில் உங்களின் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அவிட்டம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
சதயம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
பூரட்டாதி : மதிப்புகள் அதிகரிக்கும்.

மீனம் :

குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் மற்றவரின் பணிகளை சேர்த்து பார்ப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் உள்ள நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். தன்னம்பிக்கையுடன் புதிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். சகோதர வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
பூரட்டாதி : விருப்பங்கள் நிறைவேறும்.
உத்திரட்டாதி : நுணுக்கங்களை கற்பீர்கள்.
ரேவதி : ஒற்றுமை உண்டாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

October 2020
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031