24th October 2020
  • ம் நானும்
  • இன்றைய தினப்பலன்கள் (13.10.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

இன்றைய தினப்பலன்கள் (13.10.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

2 weeks ago
23
  • ம் நானும்
  • இன்றைய தினப்பலன்கள் (13.10.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

பூர்வீக சொத்துக்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் செயல்பட்டால் காரிய வெற்றி உண்டாகும். வாரிசுகளின் மூலம் சுபவிரயங்கள் ஏற்படும். கலைஞர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளும், அனுபவமும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அஸ்வினி : வெற்றி உண்டாகும்.
பரணி : சுபவிரயங்கள் ஏற்படும்.
கிருத்திகை : திறமைகள் வெளிப்படும்.

ரிஷபம் :

நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனைவியின் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஆதரவுகளும், பாராட்டுகளும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.
ரோகிணி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
மிருகசீரிஷம் : இன்னல்கள் குறையும்.

மிதுனம் :

புதிய வேலை தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். சகோதரர்கள் வழியில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். மக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். அரசியல் சார்ந்த துறையில் இருப்பவர்கள் வாக்குறுதிகளை அளிக்கும்போது சிந்தித்து செயல்படுவது நன்மையை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : முயற்சிகள் அதிகரிக்கும்.
திருவாதிரை : அனுசரித்து செல்லவும்.
புனர்பூசம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

கடகம் :

குழந்தைகளின் கல்வி தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு புதுவிதமான சிந்தனைகளும், செயல்பாடுகளும் மேம்படும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசியும், ஆதரவும் மனதிற்கு நிம்மதியை தரும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
புனர்பூசம் : ஆர்வம் அதிகரிக்கும்.
பூசம் : சிந்தனைகள் மேம்படும்.
ஆயில்யம் : நிம்மதியான நாள்.

சிம்மம் :

உறவினர்கள் பற்றிய தெளிவு உண்டாகும். வாசனை பொருட்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு இலாபம் அதிகரிக்கும். மனதில் தோன்றும் தேவையற்ற எண்ணங்களின் மூலம் குழப்பமான சூழ்நிலைகள் ஏற்படலாம். மனை தொடர்பான விவகாரங்களில் சிந்தித்து செயல்படுவது நன்மை தரும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : தெளிவு உண்டாகும்.
பூரம் : இலாபம் அதிகரிக்கும்.
உத்திரம் : சிந்தித்து செயல்படவும்.

கன்னி :

புதிய முயற்சிகள் தொடர்பான செயல்பாடுகளால் அலைச்சல்கள் ஏற்படலாம். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். மூத்த உடன்பிறப்புகளிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பத்திரம் தொடர்பான துறையில் இருப்பவர்களுக்கு இலாபம் அதிகரிக்கும். தொழில் தொடர்பான எதிர்பாராத முதலீடுகள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திரம் : அலைச்சல்கள் ஏற்படலாம்.
அஸ்தம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.
சித்திரை : முதலீடுகள் மேம்படும்.

துலாம் :

இணையம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பொருளாதார மேன்மை உண்டாகும். தலைமை பொறுப்பில் இருப்பவர்களுக்கு ஆதரவு கிடைக்கும். பொன், பொருள் போன்ற பொருட்களை வாங்குவது தொடர்பான செயல்பாடுகள் நேரிடலாம். சுபகாரியங்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
சித்திரை : மேன்மை உண்டாகும்.
சுவாதி : மகிழ்ச்சியான நாள்.
விசாகம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

விருச்சிகம் :

வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு இலாபம் கிடைக்கும். மனதில் இருந்துவந்த சில விஷயங்களை பகிர்வதன் மூலம் தெளிவு உண்டாகும். எதிர்காலம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
விசாகம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
அனுஷம் : இலாபம் கிடைக்கும்.
கேட்டை : தெளிவு உண்டாகும்.

தனுசு :

எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மேன்மையான வாய்ப்புகள் உண்டாகும். உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உயர் அதிகாரிகளின் மூலம் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மூலம் : மேன்மையான நாள்.
பூராடம் : அறிவு வெளிப்படும்.
உத்திராடம் : விழிப்புணர்வு வேண்டும்.

மகரம் :

புதிய முயற்சிகள் தொடர்பான செயல்பாடுகளில் பெரியோர்களின் ஆலோசனைகளை பெற்று முடிவு செய்வது நன்மையை தரும். எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். மனதில் தோன்றும் இனம்புரியாத பழைய நினைவுகளின் மூலம் கவலைகள் ஏற்பட்டு மறையும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடுவது மற்றும் ஆலோசனை கூறுவதை தவிர்ப்பது நன்மையை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : ஆலோசனைகள் பெறவும்.
திருவோணம் : சேமிப்புகள் குறையும்.
அவிட்டம் : கவலைகள் தோன்றும்.

கும்பம் :

சுயதொழில் தொடர்பான செயல்பாடுகளில் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் உதவிகளால் சில செயல்களை செய்து முடிப்பீர்கள். பொருளாதாரம் தொடர்பான செயல்பாடுகளில் மேன்மை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். வாரிசுகளின் செயல்பாடுகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : ஆதரவு கிடைக்கும்.
சதயம் : மேன்மை உண்டாகும்.
பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.

மீனம் :

வியாபாரத்தில் பெரிய நபர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பெரியோர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : அறிமுகம் கிடைக்கும்.
உத்திரட்டாதி : அனுசரித்து செல்லவும்.
ரேவதி : வாய்ப்புகள் உண்டாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

October 2020
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031