24th October 2020
  • ராசிபலன்
  • இன்றைய தினப்பலன்கள் (10.10.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

இன்றைய தினப்பலன்கள் (10.10.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

2 weeks ago
21
  • ராசிபலன்
  • இன்றைய தினப்பலன்கள் (10.10.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

உத்தியோகத்தில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை தைரியத்துடன் சமாளிப்பீர்கள். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். நிர்வாக பொறுப்பில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவும். பூமியை விருத்தி செய்வதற்கான சாதகமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
அஸ்வினி : தைரியமான நாள்.
பரணி : வாய்ப்புகள் உண்டாகும்.
கிருத்திகை : சாதகமான நாள்.

ரிஷபம் :

திருமண வரன் தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும். வீண் கவலைகளால் மனம் வருந்துவீர்கள். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். கலைஞர்களுக்கு தனவரவுகள் மேம்படும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். தொழில் சார்ந்த அலைச்சல்களால் மனச்சோர்வு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் பிங்க்
கிருத்திகை : சுபமான நாள்.
ரோகிணி : தனவரவுகள் மேம்படும்.
மிருகசீரிஷம் : விரயங்கள் உண்டாகும்.

மிதுனம் :

வர்த்தகம் தொடர்பான பணிகளில் இலாபம் உண்டாகும். கூட்டாளிகளுடன் இணைந்து விருந்துகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். எண்ணங்களின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். அரசாங்கத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
மிருகசீரிஷம் : இலாபம் உண்டாகும்.
திருவாதிரை : உதவிகள் கிடைக்கும்.
புனர்பூசம் : உறவு மேம்படும்.

கடகம் :

போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி அடைவீர்கள். மாணவர்களுக்கு கல்வி பயிலும் விதங்களில் மாற்றங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். புதுவிதமான யுக்திகளை கையாளுவீர்கள். மனதில் புதுவிதமான எண்ணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
புனர்பூசம் : மாற்றங்கள் ஏற்படும்.
பூசம் : நிதானம் வேண்டும்.
ஆயில்யம் : மகிழ்ச்சி உண்டாகும்.

சிம்மம் :

உயர் அதிகாரிகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். பணியில் எடுத்த செயலை முடித்து காட்டுவதன் மூலம் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் தொழில் சம்பந்தமான சில நுணுக்கங்களை கற்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மகம் : அனுகூலமான நாள்.
பூரம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
உத்திரம் : செல்வாக்கு உயரும்.

கன்னி :

வாகனப் பயணங்களால் மேன்மை உண்டாகும். சுயதொழில் புரிபவர்களுக்கு இருந்துவந்த பணச்சிக்கல்கள் நீங்கும். மனதில் தேவையற்ற குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். புதிய நபர்களின் நட்புகளால் தனலாபம் அடைவீர்கள். தொழில் தொடர்பான பயணங்களால் சாதகமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
உத்திரம் : மேன்மை உண்டாகும்.
அஸ்தம் : சிக்கல்கள் நீங்கும்.
சித்திரை : சாதகமான நாள்.

துலாம் :

எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். மறைப்பொருள் சம்பந்தமான ஞானத்தேடல் உண்டாகும். புதியவற்றை கண்டறிந்து புகழப்படுவீர்கள். சங்கீத இசைக்கலைஞர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். போட்டிகளில் ஈடுபடும்போது கவனமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
சித்திரை : உதவிகள் கிடைக்கும்.
சுவாதி : தேடல் உண்டாகும்.
விசாகம் : புகழப்படுவீர்கள்.

விருச்சிகம் :

உறவினர்களால் பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் பேசும்போது கவனமாக இருக்கவும். அலுவலகப் பணிகளில் கூடுதல் பொறுப்புகள் உண்டாகும். தாய் பற்றிய கவலைகள் மேலோங்கும். பொருட்களை கையாளுவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
விசாகம் : கவனம் வேண்டும்.
அனுஷம் : பொறுப்புகள் உண்டாகும்.
கேட்டை : எச்சரிக்கை வேண்டும்.

தனுசு :

புதிய வீடு, மனை வாங்குவதற்கான கடன் உதவிகள் கிடைக்கும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நண்பர்களின் மூலம் தொழிலில் அபிவிருத்தி செய்வீர்கள். பெருந்தன்மையான செயல்பாடுகளால் உங்களின் மீதான மதிப்புகள் உயரும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மூலம் : உதவிகள் கிடைக்கும்.
பூராடம் : அபிவிருத்தியான நாள்.
உத்திராடம் : மதிப்புகள் உயரும்.

மகரம் :

மூத்த சகோதரர்களால் சாதகமான சூழல் உண்டாகும். நுட்பங்களை கற்பதில் ஆர்வம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேன்மையான சூழல் உண்டாகும். இறைபணிக்காக நன்கொடைகள் கொடுத்து மனம் மகிழ்வீர்கள். விளையாட்டு வீரர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்கவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திராடம் : சாதகமான நாள்.
திருவோணம் : ஆர்வம் உண்டாகும்.
அவிட்டம் : கவனத்துடன் இருக்கவும்.

கும்பம் :

பெரியோர்களின் ஆதரவினால் பூர்வீகத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். உயர் அதிகாரிகளிடம் நட்பு உண்டாகும். தனவரவில் இருந்துவந்த தடைகள் அகலும். முயற்சியால் சேமிப்புகள் உயரும். பொதுக்கூட்டப் பேச்சுக்களில் ஆதரவான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
அவிட்டம் : பிரச்சனைகள் குறையும்.
சதயம் : நட்பு உண்டாகும்.
பூரட்டாதி : சேமிப்புகள் உயரும்.

மீனம் :

தொழில் துறையில் இருந்துவந்த போட்டிகளை சமாளிப்பீர்கள். நீர்நிலைய தொழில்களில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அரசாங்க பணியில் இருந்துவந்த இடர்பாடுகள் நீங்கும். பொதுச்சேவையில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். புதிய மனை தொடர்பான சிந்தனைகள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : இடர்பாடுகள் நீங்கும்.
ரேவதி : சிந்தனைகள் தோன்றும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

October 2020
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031