வரலாற்றில் இன்று – 06.10.2020 மேகநாத சாஃகா

 வரலாற்றில் இன்று – 06.10.2020 மேகநாத சாஃகா

இந்திய வானியற்பியலாளர் மேகநாத சாஃகா 1893ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி டாக்காவில் பிறந்தார்.

இவர் சாஃகா அயனியாக்க சமன்பாடு என்ற புகழ்பெற்ற சமன்பாட்டைத் தருவித்தவர். இந்தச் சமன்பாடு விண்மீன்களின் புறநிலை மற்றும் வேதி இயல்புகளைப் பற்றி அறிய உதவுகிறது. இந்தியாவின் அறிவியல் ஆராய்ச்சித் துறையில் இவர் அமைத்த அடித்தளம் முக்கியமானது.

புகழ்பெற்ற இயற்பியலாளராக அறியப்பட்டாலும் சாஃகா தீவிர சமுதாய நல நோக்குடைய சமூக ஆர்வலராகவே சிறு வயது முதல் இருந்தார். இவர் 1956ஆம் ஆண்டு மறைந்தார்.

ரிச்சர்டு டீடிகைண்டு

இயற்கணிதம், இயற்கணித எண் கோட்பாடு, மெய்யெண் ஆகியவற்றில் முக்கியப் பங்காற்றிய ரிச்சர்டு டீடிகைண்டு (சுiஉhயசன னுநனநமiனெ) 1831ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தார்.

இவர் கணக் கோட்பாட்டில் ஆற்றிய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இவர் 1916ஆம் ஆண்டு மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

1995ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி சூரியனுக்கு அடுத்ததாக கோளைத் தன்னிடம் கொண்ட பெரிய விண்மீன் 51 பெகாசி கண்டறியப்பட்டது.

1927ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி முதலாவது பேசும் படம் தி ஜாஸ் சிங்கர் (வுhந துயணண ளுiபெநச) வெளியானது.

1962ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வர் ப.சுப்பராயன் மறைந்தார்.

2010ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி இன்ஸ்ட்டாகிராம் ஆரம்பிக்கப்பட்டது.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published.