வரலாற்றில் இன்று – 29.07.2020 சர்வதேச புலிகள் தினம்

1 year ago
330

அழிந்து வரும் புலி இனத்தை பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச புலிகள் தினம் ஜூலை 29ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உலகிலேயே இந்திய வங்கதேச எல்லையில் உள்ள சுந்தரவனக் காடுகளில் தான், புலிகள் அதிகளவில் வாழ்கின்றன.

மனிதர்கள் புலிகளை வேட்டையாடுவதாலும், மேலும் காடுகளில் ஏற்படும் தீ விபத்து, காட்டாற்று வெள்ளம் காரணமாகவும் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனவே புலிகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காகவே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

பி.சா.சுப்பிரமணிய சாஸ்திரி

தமிழ் மொழிபெயர்ப்பு முன்னோடியான பி.சா.சுப்பிரமணிய சாஸ்திரி 1890ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி திருச்சி மாவட்டத்திலுள்ள பாலகிருஷ்ணன்பட்டியில் பிறந்தார்.

இவர் சாகித்ய அகாடமியின் மகாமகிமோ பாத்தியாய என்ற பட்டம், வித்தியாரத்தினம், வித்யாநிதி, வித்யாபூஷணம் போன்ற ஏராளமான பட்டங்களை பெற்றுள்ளார்.

தமிழ் இலக்கணக் கோட்பாடுகளின் வரலாறும் சமஸ்கிருத இலக்கியத்தோடு அவற்றுக்கான தொடர்பும் என்ற ஆய்வுக்காக, (History of Grammatical Theories in Tamil and their relation to grammatical literature in Sanskrit) 1930ஆம் ஆண்டு தமிழாய்வில் முதல் முனைவர் பட்டம் பெற்றார்.

விளக்கமுறை இலக்கணம், வரலாற்று இலக்கணம், ஒப்பீட்டு இலக்கணம் என மூவகை இலக்கணத்தையும் எழுதியவர். வாழ்நாள் முழுவதையும் தமிழ்மொழி ஆராய்ச்சிக்காக அர்ப்பணித்த இவர் தனது 87வது வயதில் (1978) மறைந்தார்.

முசோலினி

உலகை உலுக்கிய சர்வாதிகாரிகள் பட்டியலில் இருக்கும் இத்தாலியின் சர்வாதிகாரியான பெனிட்டோ முசோலினி 1883ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி பிறந்தார்.

1939ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரும், முசோலினியும் ஒரே அணியில் நின்று நேச நாடுகளை எதிர்த்தனர். உலகைப் பயமுறுத்திய சர்வாதிகாரிகளில், ஹிட்லருக்கு அடுத்தபடியாக இருந்தவர் இவர்தான்.

ஜெர்மனியின் பயங்கரமான சர்வாதிகாரியாக விளங்கிய முசோலினி தனது 61வது வயதில் (1945) புரட்சிக்காரர்களால் கொல்லப்பட்டார்.

முக்கிய நிகழ்வுகள்

1958ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா ஆரம்பிக்கப்பட்டது.

1904ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி இந்தியாவின் முதன்மையான தொழிலதிபர் ஜஹாங்கீர் ரத்தன்ஜி தாதாபாய் டாடா பிறந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

November 2021
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930