இன்றைய தினப்பலன்கள் (17.07.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

 இன்றைய தினப்பலன்கள் (17.07.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். உறவினர்களின் மூலம் நன்மை உண்டாகும். சாதுர்யமான பேச்சால் எளிதாக எதையும் செய்து முடிப்பீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். உங்களின் மீதான சுய நம்பிக்கை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அஸ்வினி : பிரச்சனைகள் குறையும்.
பரணி : நன்மை உண்டாகும்.
கிருத்திகை : நம்பிக்கை அதிகரிக்கும்.

ரிஷபம் :

தொழில் ரீதியான காரியங்களில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். மனதில் தைரியம் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயணங்கள் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
கிருத்திகை : வெற்றி கிடைக்கும்.
ரோகிணி : தைரியம் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : சிந்தனைகள் மேலோங்கும்.

மிதுனம் :

தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பிரிந்து சென்ற குடும்ப உறுப்பினர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனச்சங்கடங்கள் நீங்கும். எதிர்பாராத சில செய்திகளின் மூலம் பணத்தேவை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
திருவாதிரை : சங்கடங்கள் நீங்கும்.
புனர்பூசம் : தேவைகள் அதிகரிக்கும்.

கடகம் :

முக்கிய நபர்களின் சந்திப்பும் அவர்களால் உதவியும் கிடைக்கும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். சபைகள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதரவான சூழல்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.
பூசம் : திருப்பங்கள் உண்டாகும்.
ஆயில்யம் : ஆதரவான நாள்.

சிம்மம் :

மனதில் ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகளும், செயல்பாடுகளும் மேம்படும். எதிர்பாராத சந்திப்புகளால் மாற்றம் உண்டாகும். சில நேரங்களில் மற்றவர்கள் பேசுவதை தவறாக புரிந்து கொள்ள நேரிடலாம். வியாபாரம் சம்பந்தமான திடீர் செலவுகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மகம் : சிந்தனைகள் மேம்படும்.
பூரம் : மாற்றம் உண்டாகும்.
உத்திரம் : செலவுகள் ஏற்படும்.

கன்னி :

குருமார்களின் சந்திப்பு மனதிற்கு பலவிதமான தெளிவுகளை அளிக்கும். சில நுணுக்கமான விஷயங்களை பற்றி அறிந்து கொள்வீர்கள். மருத்துவ பொருட்களின் மூலம் இலாபம் அதிகரிக்கும். ஆராய்ச்சி தொடர்பான கல்விகளில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
உத்திரம் : தெளிவு கிடைக்கும்.
அஸ்தம் : இலாபம் அதிகரிக்கும்.
சித்திரை : முன்னேற்றம் உண்டாகும்.

துலாம் :

அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் சூழ்நிலை அறிந்து செயல்பட்டால் தேவையற்ற அவப்பெயரை தவிர்க்கலாம். பயணங்களின் மூலம் அலைச்சல்கள் அதிகரிக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் ஏற்படும். தொழில், வியாபாரம் பற்றிய கவலைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
சித்திரை : சிந்தித்து செயல்படவும்.
சுவாதி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
விசாகம் : கவலைகள் உண்டாகும்.

விருச்சகம் :

வாக்குவன்மையால் எந்தவொரு செயலையும் சாதகமாக செய்து முடிப்பீர்கள். மனதில் நல்ல சிந்தனைகள் உண்டாகும். செய்யும் காரியங்களில் அறிவுத்திறன் வெளிப்படும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடக்கும். சமூகத்தில் பெரிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மெரூன் நிறம்
விசாகம் : சாதகமான நாள்.
அனுஷம் : அறிவுத்திறன் வெளிப்படும்.
கேட்டை : அறிமுகம் கிடைக்கும்.

தனுசு :

வேலை மாறுதல் பற்றிய எண்ணங்கள் மேலோங்கும். சுரங்கம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்துவந்த தொந்தரவுகள் குறையும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : எண்ணங்கள் மேலோங்கும்.
பூராடம் : தொந்தரவுகள் குறையும்.
உத்திராடம் : வாய்ப்புகள் உண்டாகும்.

மகரம் :

கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளின் மூலம் பெருமைகள் கிடைக்கப்பெறுவீர்கள். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். நல்ல சிந்தனைகள் மேலோங்கும். உயர் அதிகாரிகளின் விருப்பங்களை அறிந்து காரியங்களை செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : மனவருத்தங்கள் நீங்கும்.
திருவோணம் : பெருமைகள் கிடைக்கும்.
அவிட்டம் : பாராட்டு பெறுவீர்கள்.

கும்பம் :

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் கிடைக்கலாம். செயல்திறன் அதிகரிக்கும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்களின் உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். மாணவர்களுக்கு அவ்வப்போது மறதி பிரச்சனைகள் தோன்றி மறையும். எதிர்பாலின மக்கள் மீது புதுவிதமான ஈர்ப்பு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அவிட்டம் : பொறுப்புகள் உயரும்.
சதயம் : பிரச்சனைகள் தோன்றும்.
பூரட்டாதி : ஈர்ப்பு உண்டாகும்.

மீனம் :

பிள்ளைகள் கல்வி பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். முக்கிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும். மனோ பலம் அதிகரிக்கும். காதுகள் தொடர்பான உபாதைகள் குறையும். பத்திரிக்கை தொடர்பான செய்திகளில் மகிழ்ச்சியான தகவல்கள் கிடைக்கும்.சீருடை பணியாளர்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
பூரட்டாதி : சிந்தனைகள் மேலோங்கும்.
உத்திரட்டாதி : உபாதைகள் குறையும்.
ரேவதி : மதிப்புகள் அதிகரிக்கும்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published.