தீண்டாதே – குறும்படம்

1 year ago
946

தமிழ்நாடு கேரளா எல்லைப்பகுதியில் ஏலக்காய் மணக்கும் தோட்டத்தில் மலர்ந்த தீண்டாதே என்னும் குறும்படத்தின் இயக்குநர் திரு.ராஜபாண்டியன் அவர்கள் தன் சினிமாவின் மீதான வாசத்தை தெளித்திருக்கிறார் ஒரு அழுத்தமான கதைக்களத்தோடு, 35வயதில் அவரின் ஆர்வம் மலைக்க வைக்கிறது திறமைக்கு இடம் ஒரு தடையில்லை என்பதை உணர்த்தியிருக்கிறார். வெகு விரைவில் வெள்ளித்திரையில் ராஜபாண்டியனுக்கான ஒரு மேடை காத்திருக்கிறது என்பதில் ஐயமில்லை

அருமையான காட்சியமைப்பு, தெளிவான ஒளிப்பதிவு என அற்புதமாக கதையமைப்பு. மக்களின் இயல்பு நிலையை எதார்த்தமாக தந்து இருக்கிறீர்கள். படம் என்ற உணர்வே இல்லை, காடு மேடு கடக்கும் போது அந்தப் பிள்ளையைப் போல எங்களுக்கும் கால் வலிக்கத்தான் செய்கிறது.

தாய்மையின் தேடலும், நம்பியவர்களை வஞ்சிக்கும் அந்த கயவனின் இறுதி கதறலும் படத்தின் பலம். ஒவ்வொரு பெண்ணும் தாய்மையடையும் போதும் ஒரு குழந்தையைப் பிரசவிக்கும் போதும் படும் வேதனைகளையும் வலிகளையும் அதையும் தாண்டி தான் தன் பிள்ளை என்ற உணர்வுவோடு வயிற்றில் சுமந்தது போதாது என்று தினம் தினம் அவளின் எதிர்காலத்தை மனதில் சுமக்கிறாள். ஆனால் அவர்களை வெறும் சதைப்பிண்டமாகப் பார்க்கும் இம்மாதிரி கொடூரர்கள் சமூகத்தில் அதிகரித்திருக்கிறார்கள் என்பதை காட்டியிருக்கிறீர்கள்.

வெறும் விளையாட்டு என்பதைத் தாண்டி அந்தப்பிள்ளை வேறு ஏதையும் அறியவில்லை, நடக்கும் தவறை வல்கராக காட்டிவிடாமல் கண்ணியம் காத்திருக்கிறீர்கள். அக்கம் பக்கத்தினர் தங்கள் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கைப் பொய்த்துப்போய் பல வருடங்கள் ஆகிவிட்டது.

ஒளிய வந்த குழந்தை மயக்க நிலைக்கு சென்றதையறிந்து எதிர்த்து போராட கூட துணிவில்லாத நிலையில் அந்த பிஞ்சை கசக்கி முகர்ந்து அதன் உடலை அவன் அந்த எரியூட்டும் இடத்தில் வைக்கப்போகும் போது கண்கள் கலங்கிப்போகிறது. தாயாக நடித்திருந்த பெண் வெகு இயல்பாக தன் உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார். மடியில் உறங்கிய மகளின் மரணம் அந்த மரணத்திற்கு முன் அவள் அடைந்த வேதனை எல்லாம் நெஞ்சை கனம் கொள்ள வைக்கிறது. இந்த கதைகளத்தை எடுத்து படமாக்கியதற்காகவே உங்களைப் பாராட்ட வேண்டும். வாழ்த்துக்கள். நண்பரே உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.

இயக்குநர் ராஜபாண்டியன் அவர்களின் வாய்​மொழி மூலமாக​வே

தீண்டாதே கதை சுருக்கம் :

1980 ல் நடந்த உண்மை சம்பவம் என்று படம் ஆரம்பிக்கிறது…

பாரதி என்ற கனவனை இழந்த இளம் பெண் அவளின் தாய் வீட்டில் இருக்கும் அவளுடைய 9 வயது கண்ணாம்மா என்ற  பெண் பிள்ளையை பார்க்க போகிறாள் மகளுக்கு பள்ளி விடுமுறை காரணாமாக தாய் வீட்டில் இருந்து பாரதி  அவளுடைய மகள் கண்ணம்மாவை தான் வேலை செய்யும் ஏலக்காய் எஸ்டேட்டிற்கு அழைத்து செல்கிறாள் பின்பு மறுநாள் வீட்டில் கண்ணம்மாவை வீட்டில் விட்டுட்டு வேளைக்கு செல்கிறாள் பாரதி

வீட்டில் கண்ணம்மாவின் தேழிகள் 6 பேர் சேர்ந்து கண்ணாமூசி விளையாடுகிறார்கள் பின்பு வேலை முடிந்து வீட்டுக்கு வரும் பாரதி வீட்டில் மகள் கண்ணம்மாவை காணவில்லை என தேடுகிறாள் ஊர் மக்களும் தேடுகிறார்கள்.

ஊர் முழுக்க தேடியும் கிடைக்காமல்  தான் வேலை பார்க்கும் எஸ்டேட்டின் ஒரு படியில் அமர்ந்து அழுகிறாள் அப்பொழுது உள்ளோ ஒரு

மணிசத்தம் கேட்கிறது அதை பார்த்து அதிர்ந்து போகிறாள்.

 பின்பு கத்தி கதறி அழுது புலம்புகிறாள் தான் மகளுக்கு என்ன நடந்திருக்கும் என யூகித்து தப்பு செய்தவனை கொலை செய்துவிட்டு அந்த இடத்தை விட்டுட்டு வெளியே போகிறார்கள்…

இத்துடன் இந்த குறும்படம் முடியும்.

இதை பெரிய படமாக குறும்படம் முடிவின்  தொடர்ச்சியை வைத்து திரைக்கதை அமைத்தேன்

கண்ணம்மா வை பாலியல் கொலை செய்தவனை பாரதி கொடூரமாக கொலை செய்து இரவு நேரத்தில் வெளியே செல்கிறாள் மகளுக்கு நடந்த கொடுமை வேறு யாருக்கும் தெரியாது.

 ஆனால் பாரதி ஒருவனை கொலை செய்திருப்பதால் அவளை போலீஸ் கைது செய்கிறது

உண்மையிலேயே அந்த ஊமை தான் கண்ணம்மாவை கொன்றானா?

இந்த கொலை வழக்கில் இருந்து பாரதி நிரபராதி என நிரூபித்தாளா?

மகளுக்கு நடந்து அநீதிக்கு உண்மையான குற்றவாளிக்கு  உண்மையிலேயே தண்டனை கிடைத்ததா?

இதுதான் என்னுடைய “தீண்டாதே” முழுநீள திரை கதை

மின்​கைத்தடி சார்பாக அவரின் முயற்சிகள் ​வெற்றி​ பெற வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

November 2021
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930