​நேபாள ம​லை​யோரம்

 ​நேபாள ம​லை​யோரம்

வரலாற்றுக்கும் இயற்கைச் சின்னங்களுக்கும் பெயர் பெற்ற நேபாளத்தின் தலைநகரம் காட்மாண்டு

ஏப்ரல் 2015ல் காத்மாண்டுவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் சிதைந்தது பல இடங்களை தன்வழியில் மாற்றிக் கொண்டாலும் இன்றும் அதன் சிறப்புகளை தன்னகத்திலேயே வைத்துக் கொண்டு இருக்கிறது. நான்கு மாவட்டங்கள் அடங்கிய காட்மாண்டு மக்கள் தொகையும் பொருளாதார வளர்ச்சியும் கொண்டது நேபாள அரசின் பெரும்பாலான அரசு அலுவலகங்கள் காத்மாண்டு சமவெளியில் உள்ளதால் நான்கு மாவட்டங்களிலும் மக்கள் தொகையும், பொருளாதார வளர்ச்சியில் நேபாளத்தின் பொருளாதார மையமாக விளங்குகிறது.

ஒரு கிண்ணம் போன்ற அமைப்பில் கிண்ணம் போன்ற அமைப்பில் அமைந்த காத்மாண்டு சமவெளியின் மையப்பகுதி கடல் மட்டத்தில் இருந்து 1425 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த சமவெளியில் முக்கிய ஆறுகளில் ஒன்றான பாக்மதி ஆறு உள்ளது.  

நேபாள நாட்டின் சிவபுரி மலைகளில் வாக்துவார் எனுமிடத்தில் உற்பத்தியாகி, காத்மாண்டு சமவெளியில் பாய்ந்து, காட்மாண்டு நகரத்தையும், பதான் நகரத்தையும் பிரிக்கிறது. பாக்மதி ஆறு நேபாளத்தின் புனித ஆறாக இந்துக்களும், பௌத்தர்களும் கருதுகிறார்கள். பாக்மதி ஆற்றின் கரையில், காத்மாத் சமவெளியில் பசுபதிநாத் கோவில் உள்ளிட்ட பல இந்து மற்றும் பௌத்த சமய வழிபாட்டுத் தலங்கள் உள்ளது.

பாக்மதி ஆறு, இந்தியாவின் கங்கை ஆறு போன்று புனிதமானது.  நேபாள நாட்டு இந்து சமய வழக்கப்படி, இறந்தவரின் உடலை எரிப்பதற்கு முன்னர், புனித பாக்மதி ஆற்றில் மூன்று முறை அமிழ்த்தி எடுக்கின்றனர்

காத்மாண்டுவின் மற்றொரு புகழ்பெற்ற இந்து மற்றும் பெளத்தக் கோயில்களில் அடையாளமாகத் திகழும் கோவில்களில் ஒன்று 1300 வருடங்களாக நீரில் மிதக்கும் விஷ்ணு சிலை அறிவியலை மிஞ்சிய அதிசயம் 1300 ஆண்டுகள் நீரில் மிதக்கும் விஷ்ணு சிலை அறிவியலை அதிரவைத்துள்ளது பொதுவாக பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பது போன்ற விஷ்ணு சிலைகளையும், படங்களையும் நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் மனிதர்களை போல் படுத்த நிலையில் 13 நூற்றாண்டுகளாக நீரில் மிதந்து கொண்டிருக்கும் ஒரு அதிசய பெருமாள் சிலை காணப்பட்டு வருகின்றது.

நேபால் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து கிட்டத்தட்ட 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது புத்தானிகந்தா கோவில் இந்த கோவிலில் உள்ள விஷ்ணு சிலை ஆதிசேஷன் மேல் படுத்துக்கொண்டிருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது இதில் கிட்டதட்ட 14 அடியில் உயரத்தில் மிகவும் பிரமாண்டமாக ஒரே கல்லால் செய்யப்பட்டுள்ள இந்த சிலை, எப்படி இவ்வளவு வருடங்களாக நீரில் மிதந்தபடியே உள்ளது என்பது இன்றுவரை ஆராய்ச்சியாளர்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது 7 ஆம் நூற்றாண்டில் இந்த பகுதியை ஆண்ட விஷ்ணு குப்தா என்ற மன்னன் இந்த சிலையை நிறுவியதாக வரலாறு கூறுகிறது இந்த சிலை மிதந்தபடியே இருந்தாலும், இதற்கான அர்ச்சனைகளும், அபிஷேகங்களும் தினமும் நடந்தவண்ணமே உள்ளன மேலும் நீரில் மிதக்கும் இந்த விஷ்ணுவின் அருளை பெற பக்தர்கள் எப்போதும் இங்கு வந்த வண்ணமே உள்ளனர்.

லதா சரவணன்

Leave a Reply

Your email address will not be published.