சாமானியன் பார்​வை

2 years ago
195

கொரானா தலைவிரித்தாடும் அதன் பாதிப்பில் இருந்து அனைவரும் பூரண நலம் பெற வேண்டும் என்ற இறை வேண்டுதலோடு, சில விழிப்புணர்வு துளிகள்.

உலகம் எங்கிலும் கொரானாவின் பாதிப்புகள் அதிகரித்துக் கொண்டே வந்தாலும், சென்னையில் உள்ள அடித்தட்டு மக்களுக்கு தேவையான விழிப்புணர்வுகளை நாம் இன்னமும் சற்று அதிகரிக்கவேண்டும்.

அடிக்கடி கைகளை சுத்தமாகக் கழுவுதல், சமூக இடைவெளியோடு நடத்தல், முகக்கவசம், அணிவது என்று தற்காப்பு நடவடிக்கைகளை அரசாக்கம் ஊடகங்கள் வாயிலாக அறிவுறுத்தியும் நிறைய மக்களை அது சென்றடையவில்லை என்பதுதான் வருத்தமாக உள்ளது.

இதற்கு காரணம் கொரானாவா எனக்கெல்லாம் அது வராது, அடப்போப்பா அடிக்கிற வெய்யில்ல இதையெல்லாம் வேற மாட்டிக்கிட்டு திரியவா ? வீட்டுக்குள்ளேயே இருந்திட்டா என் குடும்பத்தைக் காப்பாத்தறது யாரு இப்படிப்பட்ட கேள்விகளுக்கு முன் இந்த முன்ஜாக்கிரதைகள் ஒளிந்து கொள்கிறது கொரானா விழித்துக் கொள்கிறது.

ஒரு விஷயம் திரும்பத் திருப்ப சொல்லப்படும் போதுதான் அதிகம் கவனிக்கப்படுகிறது . அந்த வகையில் சென்னையில் அதிக எண்ணிக்கையில் முழு பாதுகாப்போடு ஆட்டோக்கள் கொண்டு ஒலிப்பெருக்கிகளின் மூலம் இந்த விழிப்புணர்வுகளை ஒவ்வொரு தெருக்கள் இண்டு இடுக்குகளில் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும். கொரானா ஒழியும் வரை.

நெருக்கடியான பகுதிகளை கொண்ட இடங்களில் ஏழை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் முககவசங்களை குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இலவசமாக வழங்க வேண்டும்.

சென்னையில் கொரானா அதிகம் பாதிப்புள்ள மண்டலங்களில் வீடு வீடாக டெஸ்ட் எடுக்க வேண்டும். சென்னையைப் பொறுத்தவரையில் மேன்பவரை இன்னும் பலமடங்கு அதிகரிக்க வேண்டும்

எனவே அண்டை மாவட்டங்களில் இருந்து துப்புரவு பணியாளர்கள், டாக்டர்கள், செவிலியர்கள், காவலர்கள் என அனைவரையும் வரவழைத்து திறமையான களத்தில் செயல்பட கூடிய IAS IPS அதிகாரிகள் மேற்பார்வையில் அவர்களை பணியாற்றிட வைக்கவேண்டும். அத்தோடு பணிபுரிய வரும் இவர்களுக்கும் உரிய பாதுகாப்போடு தங்க இடம் உணவு தடுப்பு உபகரணங்கள் அனைத்தும் செய்து தரவேண்டும். விழிப்புணர்வு மற்றும் கொரானா தடுப்பு பணிகளை மேலும் துரிதப்படுத்த ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒவ்வொரு அமைச்சர்கள் மேற்பார்வையில், சிறப்பு அதிகாரிகள் (ராதாகிருஷ்ணன் அவர்களைப் போல ) நியமிக்க வேண்டும்.

அதிகம் தொற்று காரணமாக மருத்துவமனைகளில் இடம் இல்லை என்ற ஒரு கூற்று நிலவுகிறது. அதனால் உடனடியாக அருகாமையில் இருக்கும் கல்யாண மண்டபங்கள், கல்லூரிகள், பள்ளிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற இடங்களை அவசர காலங்களுக்கு தேவைப்படும்படி பயன்படுத்திட வேண்டும். அடிப்படை சுகாதர வசதிகள் செய்து கொடுத்தாலே பல சிக்கல்கள் தானாகவே சரியாகும். அருகில் உள்ள மருத்துவமனைகளில் மற்ற நோய்களுக்கு உண்டான மருத்துவவசதிகளையும் சீர் படுத்தவேண்டும். எல்லா மருத்துவனைகளிலும் கொரானாவின் தாக்கத்தால் வரும் மக்களுக்கு எளிமையான முறையில் என்ன செய்யவேண்டும் என்ற வழிமுறைகளை அறிவுறுத்த ஒரு குழு நியமித்து ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

சென்னையில் பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டு உள்ளதால் பொதுமக்களுக்கு அதிக சிரமம் ஏற்பட்டு உள்ளது அதை தவிர்க்க, தனியார் மருத்துவமனைகளை திறந்து மருத்துவர்கள், செவிலியர்கள் உரிய பாதுகாப்பு முறைகளை மேற்கொண்டு அரசின் வழிகாட்டுதலின் படி மக்களுக்கு சிகிச்சை தரவேண்டும்.

கொரானாவை நம்மிடம் இருந்து விரட்டுவதற்கு விழிப்புணர்வுகளோடு சம்மந்தப்பட்ட திறமை வாய்ந்த மருத்துவ வல்லுநர்கள்களிடம் ஆலோசனைகளைப் பெற்று தவிர்க்க முடியாத சூழ்நிலையில் தொற்றினைக் கட்டுப்படுத்த தேவைப்பட்டால் மீண்டும் முழுமையான ஊரடங்கை கண்டிப்புடன் அமுல்படுத்தி மக்களின் வாழ்வாதாரம் இழக்காத நிலையில் ஒரு தீர்க்கமான திட்டமிடலோடு அதி விரைவில் நோய்தொற்றை சென்னையில் முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு மண்டலத்தில் இருந்தும் அதிகம் தெரிந்த அனைத்து கட்சிக்காரர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் (பேஸ்வேல்யூ) உள்ள மனிதர்கள் மூலம் அதிகாரிகளும் இணைந்து கொரானா பற்றிய விழிப்புணர்வு செய்திகளை மக்களுக்குத் தெரியப்படுத்தலாம் அதன் மூலம் எளிமையாக பாதிக்கப்பட்ட மண்டலங்களில் உள்ள பொது மக்களைச் சென்றடையும்

அரசு தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்களில் கொரானாவை கட்டுப்படுத்தியதைப் போல பாதிப்பு அதிகம் உள்ள சென்னையில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் ஜாதி மத பாகுபாடு இன்றி அனைத்து அரசியல் கட்சிகள், தன்னார்வலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், துப்புரவு பணியாளர்கள், மக்கள் என அனைவரும் கைகோர்த்து ஒற்றுமையாக போராடினால் விரைவில் சென்னையும் கொரானா இல்லாத பகுதியாக மாற்ற முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

January 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31