• ராசிபலன்
  • இன்றைய தினப்பலன்கள் (02.06.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

இன்றைய தினப்பலன்கள் (02.06.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

2 years ago
192
  • ராசிபலன்
  • இன்றைய தினப்பலன்கள் (02.06.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

பணி சம்பந்தமான வெளியூர் பயணங்கள் சாதகமாக முடியும். செய்தொழிலில் செய்யும் சிறு மாற்றங்களின் மூலம் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். சுபச்செய்திகள் கைகூடி வரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் நிதானமாக நடந்து கொள்ளவும். அரசு தொடர்பான காரியங்களில் தடை, தாமதங்கள் நீங்கி எண்ணியவை ஈடேறும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அஸ்வினி : பயணங்கள் சாதகமாகும்.
பரணி : இலாபம் உண்டாகும்.
கிருத்திகை : எண்ணியவை ஈடேறும்.

ரிஷபம் :

தொழிலில் முன்னேற்றமும், அதற்கான முயற்சிகளும் மேம்படும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். சொந்த ஊர் பயணங்கள் மனதிற்கு புதுவிதமான மாற்றத்தை அளிக்கும். அரசாங்கத்தால் எதிர்பார்த்த சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
கிருத்திகை : முயற்சிகள் மேம்படும்.
ரோகிணி : உதவிகள் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : மாற்றமான நாள்.

மிதுனம் :

குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். செய்யும் செயல்களால் வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும். தந்தைவழி சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும். இணையதளம் தொடர்பான தொழிலில் சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
மிருகசீரிஷம் : மகிழ்ச்சி உண்டாகும்.
திருவாதிரை : செல்வாக்கு உயரும்.
புனர்பூசம் : தீர்வு கிடைக்கும்.

கடகம் :

மனதிற்கு பிடித்த இடத்திற்கு சென்று வருவதற்கான சூழல் உண்டாகும். உயர் பதவியில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் செயல்படவும். மனதில் தைரியம் பிறக்கும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். புத்திரர்களிடம் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
புனர்பூசம் : பயணங்கள் ஏற்படும்.
பூசம் : தன்னம்பிக்கை உண்டாகும்.
ஆயில்யம் : இன்னல்கள் குறையும்.

சிம்மம் :

நண்பர்களுடனான பயணங்களின் மூலம் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். வழக்கு விவகாரங்களில் புதியவர்களின் அறிமுகத்தால் மாற்றமான சூழல் உண்டாகும். தம்பதிகளுக்கிடையே அன்பும், அன்யோன்யமும் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : மகிழ்ச்சியான நாள்.
பூரம் : மாற்றம் உண்டாகும்.
உத்திரம் : அன்பு அதிகரிக்கும்.

கன்னி :

எதிர்ப்பை தாண்டி திட்டமிட்ட காரியங்களில் வெற்றி காண்பீர்கள். பொருளாதார முன்னேற்றத்திற்கான முயற்சிகள் மேம்படும். புதிய வேலைகளில் முன்னேற்றமான சூழல் அமையும். வியாபாரத்தில் கூட்டாளிகள் மூலம் ஆதரவு உண்டாகும். திறமைக்கேற்ற அங்கீகாரமும், பாராட்டும் கிடைக்கும். புதியவர்களின் அறிமுகம் புதுவிதமான அனுபவத்தை அளிக்கிறது.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
உத்திரம் : வெற்றி காண்பீர்கள்.
அஸ்தம் : முன்னேற்றம் உண்டகும்.
சித்திரை : பாராட்டுகள் கிடைக்கும்.

துலாம் :

வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும். புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். செய்யும் வேலைகளில் புத்திக்கூர்மை வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் சாதகமான பலனை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : இலாபம் உண்டாகும்.
சுவாதி : செயல்வேகம் அதிகரிக்கும்.
விசாகம் : வாய்ப்புகள் உண்டாகும்.

விருச்சிகம் :

நெருக்கமானவர்களிடம் நிதானத்தை கையாள வேண்டும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். கால்நடைகளின் மூலம் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். வாக்குறுதிகள் கொடுக்கும் போது சிந்தித்து செயல்படவும். உடல் ஆரோக்கியம் சம்பந்தமான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
விசாகம் : நிதானம் வேண்டும்.
அனுஷம் : உதவிகள் கிடைக்கும்.
கேட்டை : சிந்தித்து செயல்படவும்.

தனுசு :

உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வணிகம் தொடர்பான செயல்பாடுகளில் புத்திக்கூர்மை வெளிப்படும். வாழ்க்கை பற்றிய புரிதல் உண்டாகும். இலக்கியம் தொடர்பான பணிகளில் ஆர்வம் ஏற்படும். சில செயல்களை செய்து முடிக்க அலைச்சல்கள் அதிகமாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : மகிழ்ச்சியான நாள்.
பூராடம் : புத்திக்கூர்மை வெளிப்படும்.
உத்திராடம் : புரிதல் உண்டாகும்.

மகரம் :

நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஆசைகள் நிறைவேறும். எதிர்பார்த்த தனவரவுகள் சாதகமான பலனை அளிக்கும். உறவினர்களின் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன்கள் உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆலோசனைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
உத்திராடம் : ஆசைகள் நிறைவேறும்.
திருவோணம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
அவிட்டம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

கும்பம் :

தொழில் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். அக்கம்-பக்கம் வீட்டார்களின் மூலம் ஆதரவான சூழல் அமையும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களால் ஆதரவான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
அவிட்டம் : சிந்தனைகள் மேம்படும்.
சதயம் : தன்னம்பிக்கை உண்டாகும்.
பூரட்டாதி : செல்வாக்கு அதிகரிக்கும்.

மீனம் :

குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் கவனத்துடன் இருக்கவும். உடன்பிறந்த சகோதரர்களிடம் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வாகனப் பயணங்களில் நிதானத்துடன் செல்லவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : அனுசரித்து செல்லவும்.
உத்திரட்டாதி : வாதங்களை தவிர்க்கவும்.
ரேவதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

January 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31