• ராசிபலன்
  • இன்றைய தினப்பலன்கள் (31.05.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

இன்றைய தினப்பலன்கள் (31.05.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

1 year ago
210
  • ராசிபலன்
  • இன்றைய தினப்பலன்கள் (31.05.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் ஆதாயம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளால் தனலாபம் உண்டாகும். பிள்ளைகளின் வழியே சுபச்செய்திகள் வரும். வசதி வாய்ப்புகளால் மகிழ்ச்சி ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அஸ்வினி : ஆதாயம் உண்டாகும்.
பரணி : முன்னேற்றம் ஏற்படும்.
கிருத்திகை : மகிழ்ச்சி உண்டாகும்.

ரிஷபம் :

பயணங்களால் இலாபம் ஏற்படும். கால்நடை வளர்ப்பவர்களுக்கு இலாபம் அதிகரிக்கும். மனதில் புதிய எண்ணங்கள் தோன்றும். முயற்சிகள் ஈடேறக்கூடிய அனுகூலமான சூழ்நிலை உண்டாகும். புதிய இலக்கை நிர்ணயம் செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : தேன் நிறம்
கிருத்திகை : இலாபம் ஏற்படும்.
ரோகிணி : முயற்சிகள் ஈடேறும்.
மிருகசீரிஷம் : புதிய இலக்கு பிறக்கும்.

மிதுனம் :

பணியில் உள்ளவர்களுக்கு திறமைகள் வெளிப்படுவதற்கான சாதகமான சூழல் அமையும். இளைய உடன்பிறப்புகளால் நல்லதொரு சகாயம் உண்டாகும். புனித யாத்திரை செல்வதற்கான எண்ணங்கள் மேம்படும். தொழில் சார்ந்த புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மிருகசீரிஷம் : திறமைகள் வெளிப்படும்.
திருவாதிரை : எண்ணங்கள் மேம்படும்.
புனர்பூசம் : சிந்தித்து செயல்படவும்.

கடகம் :

சிறு தூர பயணங்களால் மாற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சசோதரர்களின் மூலம் ஆதரவான சூழல் ஏற்படும். புதிய எண்ணங்களுக்கு செயல்திட்டம் வகுத்து அதனை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
புனர்பூசம் : மாற்றம் உண்டாகும்.
பூசம் : விருப்பங்கள் நிறைவேறும்.
ஆயில்யம் : ஆதரவான நாள்.

சிம்மம் :

புதிய நபர்களின் அறிமுகம் சாதகமாகும். சாதுர்யமான பேச்சுக்களால் இலாபம் அடைவீர்கள். நண்பர்களின் உதவியால் மனமகிழ்ச்சி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையேயான உறவுநிலை மேம்படும். பொருளாதார மேம்பாட்டிற்கான சிந்தனைகள் மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
மகம் : அறிமுகம் கிடைக்கும்.
பூரம் : உறவு மேம்படும்.
உத்திரம் : சிந்தனைகள் மேலோங்கும்.

கன்னி :

அறச்செயல்களால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். உடல் தோற்றத்தின் மாறுதலுக்கான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். அறப்பணிகளால் கீர்த்தி உண்டாகும். உயர் பதவியில் இருப்பவர்களிடமிருந்து சாதகமான செய்திகள் வரும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.
அஸ்தம் : கீர்த்தி உண்டாகும்.
சித்திரை : சாதகமான நாள்.

துலாம் :

மூத்த உடன்பிறப்புகளால் சாதகமான சூழல் அமையும். புத்திரர்களால் முன்னேற்றமான சூழல் உண்டாகும். கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும். கலைஞர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான

வாய்ப்புகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
சித்திரை : முன்னேற்றமான நாள்.
சுவாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
விசாகம் : வாய்ப்புகள் உண்டாகும்.

விருச்சிகம் :

நீண்ட நாள் நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் உயர்வு உண்டாகும். விவாதங்களில் சாதகமான சூழலால் வெற்றி கிடைக்கும். சமூக சேவை புரிபவர்களுக்கு புகழ் உண்டாகும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : உயர்வான நாள்.
அனுஷம் : வெற்றி கிடைக்கும்.
கேட்டை : கீர்த்தி உண்டாகும்.

தனுசு :

செய்தொழிலின் மேன்மைக்கான புதிய யுக்திகளை கையாளுவீர்கள். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். சுயதொழில் சம்பந்தமான கடன் உதவிகள் கிடைக்கும். பயணங்கள் சம்பந்தமான விரயச் செலவுகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
மூலம் : மேன்மையான நாள்.
பூராடம் : செல்வாக்கு உயரும்.
உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.

மகரம் :

பெரியோர்களின் ஆலோசனைகள் மனத்தெளிவை அளிக்கும். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். உயர்கல்வியில் நுட்பத் திறமைகளை கற்பீர்கள். அலைச்சல்களால் சாதகமான சூழல் அமையும். தலைமைப் பதவியில் உள்ளவர்கள் நிதானத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
உத்திராடம் : தெளிவு கிடைக்கும்.
திருவோணம் : ஆதாயம் உண்டாகும்.
அவிட்டம் : நிதானத்துடன் செயல்படவும்.

கும்பம் :

புதிய நபர்களிடம் பேசும் போது கவனம் வேண்டும். கொடுக்கல் – வாங்கல்களில் நிதானம் வேண்டும். தொழிலில் கூட்டாளிகளிடம் அனுசரித்து செல்லவும். பொருட்களை கையாளுவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
அவிட்டம் : கவனம் வேண்டும்.
சதயம் : அனுசரித்து செல்லவும்.
பூரட்டாதி : எச்சரிக்கை வேண்டும்.

மீனம் :

சுயதொழில் புரிபவர்களுக்கு ஏற்பட்ட பணச்சிக்கல்கள் நீங்கும். புதிய முயற்சிகளில் காரியத்தடைகள் உண்டாகும். தொழிலில் ஏற்படும் அலைச்சல்களால் சுபச்செய்திகள் கிடைக்கும். நண்பர்களின் மூலம் ஆதரவான சூழல் உண்டாகும். போட்டியில் எண்ணிய வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : தடைகள் உண்டாகும்.
உத்திரட்டாதி : அலைச்சல்கள் ஏற்படும்.
ரேவதி : ஆதரவான நாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

November 2021
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930