• ராசிபலன்
  • இன்றைய தினப்பலன்கள் (30.05.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

இன்றைய தினப்பலன்கள் (30.05.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

1 year ago
329
  • ராசிபலன்
  • இன்றைய தினப்பலன்கள் (30.05.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். எதிர்பாராத தனவரவுகள் சாதகமான பலன்களை அளிக்கும். மனைவிவழி உறவுகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் சாதகமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அஸ்வினி : எண்ணங்கள் ஈடேறும்.
பரணி : மகிழ்ச்சி உண்டாகும்.
கிருத்திகை : சாதகமான நாள்.

ரிஷபம் :

எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களில் நிதானத்துடன் செல்லவும். மனை தொடர்பான பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். மனதில் பலவிதமான எண்ணங்களால் குழப்பமான சூழல் நிலவும். எந்த ஒரு வேலையையும் பதற்றமின்றி நிதானத்துடன் செயல்படுத்தவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.
ரோகிணி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : நிதானம் வேண்டும்.

மிதுனம் :

செய்யும் வேலையில் இருந்த தடை, தாமதங்கள் நீங்கி வெற்றி உண்டாகும். நண்பர்களின் மூலம் தொழில் சம்பந்தமான முயற்சிகள் சாதகமான பலனை அளிக்கும். அலுவலகத்தில் இருந்த பொறுப்புகள் குறையும். எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். கணவன், மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மிருகசீரிஷம் : தடைகள் அகலும்.
திருவாதிரை : பொறுப்புகள் குறையும்.
புனர்பூசம் : அன்யோன்யம் அதிகரிக்கும்.

கடகம் :

குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். தாய்வழி உறவினர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். பயணங்கள் நினைத்த பலன்களை தரும். புத்திரர்களின் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். வாக்கு சாதுர்யத்தால் பாராட்டப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
புனர்பூசம் : தேவைகள் நிறைவேறும்.
பூசம் : இன்பமான நாள்.
ஆயில்யம் : இன்னல்கள் குறையும்.

சிம்மம் :

தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதிர்பார்த்த பலனை அளிக்கும். உயர்கல்வி பயில்பவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். நிர்வாகம் தொடர்பான புதிய முடிவுகளில் சற்று நிதானத்துடன் செயல்படவும். தாய் பற்றிய கவலைகள் மனதில் தோன்றி மறையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மகம் : முயற்சிகள் ஈடேறும்.
பூரம் : சாதகமான நாள்.
உத்திரம் : கவலைகள் மறையும்.

கன்னி :

அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களுடன் தேவையற்ற வாதங்களை தவிர்க்கவும். மற்றவர்களின் செயல்பாடுகளை விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நன்மையை அளிக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : வாதங்களை தவிர்க்கவும்.
அஸ்தம் : விமர்சனங்கள் உண்டாகும்.
சித்திரை : அனுகூலமான நாள்.

துலாம் :

எந்த ஒரு செயலையும் உற்சாகத்துடன் செய்து முடிப்பீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்வி சம்பந்தமான செலவுகள் உண்டாகும். சொத்து சம்பந்தமான வழக்கு விவகாரங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : புத்துணர்ச்சியான நாள்.
சுவாதி : சுபவிரயம் உண்டாகும்.
விசாகம் : சாதகமான நாள்.

விருச்சிகம் :

செய்யும் புதிய முயற்சிகளால் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். கூட்டாளிகளின் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும். சொத்துக்கள் சம்பந்தமான வழக்கு விவாகாரங்களில் கவனத்துடன் இருக்கவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த இன்னல்கள் நீக்கி சுபிட்சம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
விசாகம் : சாதகமான நாள்.
அனுஷம் : கவனத்துடன் இருக்கவும்.
கேட்டை : சுபிட்சம் உண்டாகும்.

தனுசு :

புதிய நபர்களின் அறிமுகத்தால் தொழிலில் அபிவிருத்திக்கான சூழல் உண்டாகும். வியாபார முன்னேற்றத்திற்கான திட்டங்களில் சிறு சிறு தடைகள் தோன்றி மறையும். உத்தியோகத்தில் இருந்துவந்த வேலைப்பளு குறையும். எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மூலம் : அபிவிருத்தி உண்டாகும்.
பூராடம் : தடைகள் நீங்கும்.
உத்திராடம் : சேமிப்பு குறையும்.

மகரம் :

தேவையற்ற மனக்குழப்பங்களால் செய்யும் செயல்களில் காலதாமதம் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் உரையாடும் போது சற்று கவனத்துடன் உரையாடவும். புதிய முதலீடுகளில் பெரியவர்களின் ஆலோசனைகளை கேட்பது நன்மையை அளிக்கும். சமூக சேவையில் ஈடுபடுபவர்கள் சற்று நிதானத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
உத்திராடம் : காலதாமதம் உண்டாகும்.
திருவோணம் : கவனத்துடன் உரையாடவும்.
அவிட்டம் : நிதானத்துடன் செயல்படவும்.

கும்பம் :

பெரியோர்களின் ஆசீர்வாதத்தால் சுபிட்சமான சூழல் உண்டாகும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் அமையும். வெளியூரிலிருந்து எதிர்பாராத செய்திகள் கிடைக்கும். புதிய முயற்சிகளால் செல்வமும், செல்வாக்கும் உயரும். மனதில் இருந்துவந்த சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
அவிட்டம் : சுபிட்சமான நாள்.
சதயம் : கலகலப்பான சூழல் அமையும்.
பூரட்டாதி : தீர்வு கிடைக்கும்.

மீனம் :

திட்டமிட்ட காரியங்களில் சுறுசுறுப்புடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். புதிய முயற்சிகளின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். தேவையற்ற செலவுகளை குறைப்பதன் மூலம் பொருளாதார சிக்கல்கள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
பூரட்டாதி : சுறுசுறுப்பு மேம்படும்.
உத்திரட்டாதி : அனுபவம் உண்டாகும்.
ரேவதி : சிக்கல்கள் குறையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

November 2021
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930