• ராசிபலன்
  • இன்றைய தினப்பலன்கள் (29.05.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

இன்றைய தினப்பலன்கள் (29.05.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

2 years ago
259
  • ராசிபலன்
  • இன்றைய தினப்பலன்கள் (29.05.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். தொழில் சம்பந்தமான புதிய மாற்றங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவுகளால் தொழிலில் ஏற்பட்ட இன்னல்கள் நீங்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பொருளாதார மேன்மைக்கான செயல்திட்டங்களால் எண்ணிய பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அஸ்வினி : மாற்றங்கள் உண்டாகும்.
பரணி : இன்னல்கள் நீங்கும்.
கிருத்திகை : மேன்மையான நாள்.

ரிஷபம் :

தந்தையிடம் அனுசரித்து செல்லவும். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் வாக்குறுதிகளை அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.
ரோகிணி : தேவைகள் பூர்த்தியாகும்.
மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும்.

மிதுனம் :
நண்பர்களின் மூலம் விரய செலவுகள் உண்டாகும். எண்ணிய காரியங்களை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள். மனைவியிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். தொழிலில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பணிகளில் எதையும் செய்வதற்கான சுதந்திரம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
மிருகசீரிஷம் : செலவுகள் உண்டாகும்.
திருவாதிரை : வேறுபாடுகள் மறையும்.
புனர்பூசம் : சுதந்திரம் உண்டாகும்.

கடகம் :

பணிபுரியும் இடங்களில் தேவையற்ற வாதங்களை தவிர்க்கவும். சுபநிகழ்ச்சிகள் தொடர்பான அலைச்சல்கள் உண்டாகும். பொருளாதார முன்னேற்றம் சம்பந்தமான எண்ணங்கள் மேலோங்கும். பணிகளில் மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
புனர்பூசம் : வாதங்களை தவிர்க்கவும்.
பூசம் : அலைச்சல்கள் உண்டாகும்.
ஆயில்யம் : எண்ணங்கள் மேலோங்கும்.

சிம்மம் :

தொழில் தொடர்பான நுட்ப அறிவு மேம்படும். அதிகார பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். பிள்ளைகளின் மூலம் அனுகூலமான செயல்கள் உண்டாகும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளை சுமூகமான முறையில் பேசி முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மகம் : நுட்ப அறிவு மேம்படும்.
பூரம் : அறிமுகம் கிடைக்கும்.
உத்திரம் : தரிசனம் கிடைக்கும்.

கன்னி :

உறவுகளிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வாகன வசதிகள் மேம்படும். செய்யும் பணிகளில் விமர்சனங்கள் உண்டாகும். பிறருக்கு உதவும் போது மிகுந்த கவனம் வேண்டும். நீர்வழி தொழிலின் மூலம் இலாபம் உண்டாகும். புதிய திட்டங்களை தீட்டுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.
அஸ்தம் : கவனம் வேண்டும்.
சித்திரை : இலாபம் உண்டாகும்.

துலாம் :

நீண்ட நாள் நண்பர்களை கண்டு மகிழ்வீர்கள். தொழிலில் மூத்த அதிகாரிகளின் ஆலோசனைகள் கிடைக்கும். வாகனங்களால் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். பொருட்சேர்க்கையால் சேமிப்பு உயரும். கால்நடைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
சித்திரை : ஆலோசனைகள் கிடைக்கும்.
சுவாதி : இலாபம் உண்டாகும்.
விசாகம் : சேமிப்பு உயரும்.

விருச்சிகம் :

வாக்குவன்மையால் முன்னேற்றம் உண்டாகும். எண்ணிய காரியங்கள் நடைபெறும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். பணிகளில் உள்ள காரியத்தடைகளை களைவீர்கள். எதையும் சமாளிக்கும் திறமை மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : முன்னேற்றம் உண்டாகும்.
அனுஷம் : எண்ணங்கள் ஈடேறும்.
கேட்டை : திறமைகள் மேம்படும்.

தனுசு :

கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். தொழிலில் உண்டான பழைய பாக்கிகளை வசூலிக்க புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தொழில் சார்ந்த துறைகளில் மரியாதைகள் உயரும். சகோதரர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மூலம் : புரிதல் உண்டாகும்.
பூராடம் : முயற்சிகள் சித்தமாகும்.
உத்திராடம் : மரியாதைகள் உயரும்.

மகரம் :

உடைமைகளை கவனத்துடன் வைத்துக் கொள்ளவும். மனதில் பலவிதமான சிந்தனைகள் உண்டாகும். தொழில் சார்ந்த முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே அமைதி போக்கினை கடைபிடிக்கவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திராடம் : கவனம் வேண்டும்.
திருவோணம் : சிந்தனைகள் உண்டாகும்.
அவிட்டம் : அமைதி வேண்டும்.

கும்பம் :

வெளியிடங்களுக்கு சென்று வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சக ஊழியர்களால் சாதகமான சூழல் அமையும். நண்பர்களின் உதவியால் தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அவிட்டம் : வாய்ப்புகள் உண்டாகும்.
சதயம் : சாதகமான நாள்.
பூரட்டாதி : நட்புகள் உண்டாகும்.

மீனம் :

பிள்ளைகள் வழியே அனுகூலமான பலன்கள் உண்டாகும். மனதில் இருந்த கவலைகள் நீங்கும். நிர்வாகம் சம்பந்தப்பட்ட முடிவுகளில் கவனம் வேண்டும். கடன்களை அளிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பெண் ஊழியர்களிடம் சற்று கவனமாக இருக்கவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
பூரட்டாதி : அனுகூலமான நாள்.
உத்திரட்டாதி : கவனம் வேண்டும்.
ரேவதி : முயற்சிகள் மேம்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

January 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31