எண்ணெய் கத்திரிக்காய் புளிக் குழம்பு – வெங்கடேஷ் ஆறுமுகம்

2 years ago
339

தேவையான பொருட்கள்: மீடியம் சைஸ் கத்தரிக்காய் – கால் கிலோ
தக்காளி – 2
தேங்காய் – 2 பத்தைகள்
சி.வெங்காயம் – 15
பூண்டு – 10 பல்
கடுகு – கால் ஸ்பூன்
வெந்தயம் – அரை ஸ்பூன்

புளி கரைசல் – 1 கப்
நல்லெண்ணெய் – 100மிலி
மிளகாய் பொடி – 2 ஸ்பூன்
மஞ்சள் பொடி – கால் ஸ்பூன்
தனியா பொடி – 1ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கைப்பிடி
கொத்தமல்லி – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை: சின்ன வெங்காயத்தை தோல் உரித்து இரண்டாக நறுக்கவும் தக்காளியை மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கவும். கத்தரிக்காய்களின் நீளக் காம்புகளை மட்டும் நறுக்கி எடுக்கவும்.

தொப்பி போல மேலே படர்ந்துள்ள காம்பை நீக்காமல் காயை நான்காகக் கீறிக் கொள்ளவும்.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும்..

நறுக்கிய தக்காளி & நறுக்கிய (பாதி) வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வதக்கியவுடன் அதை நன்கு ஆற வைத்து தேங்காய் சேர்த்து மிக்சியில் அரைக்கவும்

வாணலியில் எண்ணெய் விட்டு வெந்தயம் & கடுகை தாளிக்கவும். அடுத்து நறுக்கி வைத்துள்ள மீதி வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

வதங்கியதும் பூண்டை தட்டிப் போட்டு வதக்கவும். பிறகு கத்தரிக்காய்களை போட்டு மீதி எண்ணெய் அனைத்தும் ஊற்றி நன்கு வதக்கவும். பின்பு அரைத்த தேங்காய் பேஸ்ட்டை..

சேர்த்து கிளறி விடவும். இதனுடன் மிளகாய், தனியா, மஞ்சள் பொடிகளை சேர்த்துக் கிளறி இப்போது புளி கரைசல் சேர்த்து, அதோடு..

இன்னும் கொஞ்சம் நீரும் சேர்த்து தேவையான அளவு உப்பைச் சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதித்து காய்கள் வெந்து

எண்ணெய் மேலாக எழுந்து வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி கொத்துமல்லித் தழைகளை தூவவும்! கமகமக்கும் எண்ணெய் கத்தரிக்காய் புளிக்குழம்பு ரெடி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

January 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31