• ராசிபலன்
  • இன்றைய தினப்பலன்கள் (12.05.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

இன்றைய தினப்பலன்கள் (12.05.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

2 years ago
525
  • ராசிபலன்
  • இன்றைய தினப்பலன்கள் (12.05.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் நிலவும். வீடு பராமரிப்பு தொடர்பான செலவுகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அஸ்வினி : சிறப்பான நாள்.
பரணி : உதவிகள் கிடைக்கும்.
கிருத்திகை : மகிழ்ச்சி உண்டாகும்.

ரிஷபம் :

சவாலான வேலைகளில் ஈடுபட்டு அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எதிலும் சிந்தித்து செயல்படுவது முன்னேற்றத்தை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : பாராட்டுகள் கிடைக்கும்.
ரோகிணி : சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.
மிருகசீரிஷம் : முன்னேற்றமான நாள்.

மிதுனம் :

அக்கம்-பக்கத்து வீட்டாரிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். குடும்பத்தில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவுகளும், அலைச்சல்களும் அதிகரிக்கும். எந்த காரியத்திலும் அவரசமின்றி நிதானத்துடன் செயல்பட வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும்.
திருவாதிரை : வாதங்களைத் தவிர்க்கவும்.
புனர்பூசம் : நிதானம் வேண்டும்.

கடகம் :

பலவிதமான குழப்பங்களில் இருந்து மனஅமைதி ஏற்படும். நினைத்த காரியங்கள் எண்ணிய படி நிறைவேறும். பணி புரிபவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
புனர்பூசம் : அமைதியான நாள்.
பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.
ஆயில்யம் : புதிய நட்பு கிடைக்கும்.

சிம்மம் :

தொழில் சம்பந்தமான பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். தனவரவுகள் இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் இருக்கும். குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. குடும்பத்தில் பிள்ளைகள் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வார்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
மகம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
பூரம் : அனுசரித்து செல்லவும்.
உத்திரம் : ஆதரவு கிடைக்கும்.

கன்னி :

பெற்றோர்களின் ஆதரவுகள் மனதிற்கு புதிய நம்பிக்கையை அளிக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத தனவரவுகளின் மூலம் சேமிப்பு உயரும். பூர்வீக சொத்துக்களின் மூலம் நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
உத்திரம் : நம்பிக்கை உண்டாகும்.
அஸ்தம் : புதிய நட்பு கிடைக்கும்.
சித்திரை : சேமிப்பு உயரும்.

துலாம் :

ஆடை மற்றும் ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த மறைமுக போட்டிகள் குறையும். செயல்பாடுகளில் புத்திக்கூர்மை வெளிப்படும். தனம் சார்ந்த செயல்பாடுகள் அதிகரிக்கும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
சித்திரை : போட்டிகள் குறையும்.
சுவாதி : புத்திக்கூர்மை வெளிப்படும்.
விசாகம் : மகிழ்ச்சி உண்டாகும்.

விருச்சிகம் :

ஆரோக்கியம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். வாகனத்தை விருப்பம் போல் மாற்றி அமைப்பீர்கள். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். சகோதரர்களின் மூலம் நன்மை உண்டாகும். எடுத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
விசாகம் : செலவுகள் ஏற்படலாம்.
அனுஷம் : மாற்றம் ஏற்படும்.
கேட்டை : நன்மை உண்டாகும்.

தனுசு :

வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மனைவிவழி உறவினர்களால் நன்மை உண்டாகும். பூர்வீக சொத்துக்களை எண்ணம் போல் மாற்றி அமைப்பீர்கள். கலைப்பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
மூலம் : முடிவுகள் சாதகமாகும்.
பூராடம் : நன்மை உண்டாகும்.
உத்திராடம் : ஆர்வம் அதிகரிக்கும்.

மகரம் :

குடும்பத்தினரின் ஆசைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். கணவன், மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் இலாபகரமான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனை, வீடு சம்பந்தமான சிந்தனைகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
உத்திராடம் : அன்பு அதிகரிக்கும்.
திருவோணம் : இலாபகரமான நாள்.
அவிட்டம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

கும்பம் :


நீண்ட நாட்களாக திட்டமிட்டுக் கொண்டிருந்த சில காரியங்களை நிறைவேற்றுவீர்கள். எண்ணிய காரியங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நவீன மின்சாதனங்களை வாங்கி மகிழ்வீர்கள். தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : எண்ணங்கள் ஈடேறும்.
சதயம் : வெற்றி கிடைக்கும்.
பூரட்டாதி : குழப்பமான நாள்.

மீனம் :

பிள்ளைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பொருளாதார ரீதியாக உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். நண்பர்களை சந்தித்து மனம் மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
உத்திரட்டாதி : ஆசைகள் நிறைவேறும்.
ரேவதி : தீர்வு கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

January 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31