காப்பான்…

1 year ago
615

2019ஆம் ஆண்டு வெளிவந்த நடிகர் சூர்யாவின் மற்றுமொரு திரைப்படம். இதில் கே. வி. ஆனந்த் அவர்கள் இயக்கத்தில், நம்முடைய பட்டுக்கோட்டை பிரபாகர் சார் அவர்கள் கே. வி. ஆனந்த் அவர்களுடன் இணைந்து கதை திரைக்கதை மற்றும் வசனம் எழுதி, வெளிவந்த ஒரு மைல்கல்லான திரைக்காவியம் என்று சொல்லலாம்.

அதில் பிரதமருடன் கூடிய பத்திரிக்கையாளர் காட்சியில் நமது பட்டுக்கோட்டை பிரபாகர் சாரும் தோன்றி இருப்பார்கள். அவரது உண்மையான ஆதங்கத்தையும் அதில் பதிவிட்டு இருப்பார்கள். மிக அழுத்தமான ஒரு கதையை தேர்ந்தெடுத்து மிக அழகாக காட்சி படுத்தி சிறப்பான திரைக்கதையுடன் நமக்கு அளித்த மிக விறுவிறுப்பான பொழுதுபோக்கு வசதிகள் கூடிய திரைப்படம்.

அதில் ஒரு காட்சி ‘இந்த விதை முளைக்கும் பூக்கும் என்று நம்பிக்கையுடன் விதைச்சிருக்காங்க. முளைச்சிருக்கான்னு தினம் ஒரு வாட்டி நோண்டி பார்க்காதீங்க. நான் சந்திரகாந்த் வர்மாவின் விதை நிச்சயமாக மக்கிப் போக மாட்டேன்.’ என்று அழுத்தம் திருத்தமான ஒரு வசனத்தை நடிகர் ஆர்யா அவர்கள் பேசியிருப்பார். இது தன்னம்பிக்கை அளிக்கக் கூடிய ஒரு வசனமாக இருக்கிறது.

கே.வி. ஆனந்த் அவர்கள் ஆரம்பத்தில் பாக்கெட் நாவல் இதழில் பணியாற்றிய பொழுது, அவரது புகைப்படங்கள் அந்த காலகட்டத்திலேயே மிக பிரம்மாண்டமாக இருக்கும். கருப்பு வெள்ளை புகைப்படத்திலேயே சில்லவுட் என்று சொல்லக் கூடிய படங்களை சுபா பட்டுக்கோட்டை பிரபாகர் ராஜேஷ் குமார் போன்ற மிக அருமையான எழுத்தாளர்களையும் அசோகன் அவர்களையும் புகைப்படங்களை ஒவ்வொரு இதழிலும் கோலாகலமாக இடம் பெற்றிருக்கும்.

தற்பொழுது உள்ள தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய வரப்பிரசாதம் என்னவென்றால் புகைப்படம் எடுத்த அடுத்த நொடியே பார்த்துவிடலாம். சரியில்லை என்றால் திரும்ப எடுக்கலாம். அதுவும் சரியில்லை என்றால் பார்த்துப் பார்த்து விட்டு திரும்பவும் எடுக்கலாம். ஆனால் அந்த காலகட்டத்தில் புகைப்படம் எடுத்ததும் மட்டுமில்லமல் தொடர்ந்து 36 புகைப்படங்கள் எடுத்து முடித்த பின், அதை டெவலப் செய்து பிரிண்ட் போட்டதுக்கு அப்புறம் தான் அது எப்படி வந்திருக்கும் என்று பார்க்க முடியும்.

அந்த காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி அவ்வளவுதான். அதிலேயே அவ்வளவு பிரமாத படுத்தி இருப்பார் இவர் புகைப்படம் எடுப்பதற்காக நமது ஆளுமையான எழுத்தாளர்கள் நிறைய நேரம் காத்திருந்து உண்டு. அவர் சற்றே அடுத்த கட்டத்திற்கு பயணிக்க கேமரா கண்கள் உடைய பி.சி. ஸ்ரீராம் அவர்களிடம் உதவியாளராக தொடங்கினார்.

தென்மாவின் கொம்பத் திரைப்படம் முதல் சிவாஜி திரைப்படம் வரை ஒளிப்பதிவாளராக மிக பிரம்மாண்டமாக திரைப்படங்களை கொடுத்திருந்தார். ஒளிப்பதிவாளராக கிட்டத்தட்ட 14 படங்கள் முடித்து அடுத்ததாக தனியாக படம் இயக்குவதற்கு தயாரான முதல் படமே கனா கண்டேன் மிக அருமையாக அந்த படம் வந்திருந்தது. அடுத்ததாக அடுத்ததாக கோ என்று அடுத்தடுத்த படங்களை தொடர்ச்சியாக இயக்கியுள்ளார்.

கவன் திரைப்படத்தை விஜய் சேதுபதி வைத்து இயக்கினார் அடுத்ததாக கடந்த வருடம் காப்பான் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க மிக கோலாகலமாக இயக்கி வெற்றிகரமான திரைப்படமாக அளித்தார். பொதுவாக ஒளிப்பதிவாளர்கள் இயக்குனராக இருப்பது நிறைய வசதிகள் இருக்கிறது. காட்சிகள் கவிதையாக வெளிவரும் என்பதற்கு பாலுமகேந்திரா அவர்களே முன்னுதாரணம் அடுத்ததாக தங்கர்பச்சான், கே. வி. ஆனந்த், மணிகண்டன் அந்த வரிசையில் இவர் முன்னணியில் இருப்பதற்கு ஆச்சரியமில்லை

ஒரு காலத்தில் திரு பட்டுக்கோட்டை பிரபாகர் சார் அவர்களின் விறுவிறுப்பான நாவலைப் படிக்கும் பொழுது இது திரைப்படமாக வந்தால் எப்படி இருக்கும் என்று நிறைய கதைகளை கற்பனை பார்த்த நிகழ்வுகள் நிறைய உண்டு. அந்த கற்பனையில் காட்சியாகக் கிடைத்தது கிட்டத்தட்ட இவ்வளவு வருடங்கள் ஆகியிருக்கிறது. படம் பார்க்கிற ஒவ்வொரு நொடியும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. அடுத்த காட்சி என்பதை என்ன என்பதை பார்ப்பதற்கு முன் சீட்டில் அமருமாறு செய்துவிடுகிறார்கள் இயக்குனரும் கதையாசிரியரும்.

இதில் சூர்யா அவர்களுடைய நடிப்பு மிளிர வைத்துவிடுகிறது ஒரு பிரதமர் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதை மிக சிறப்பாக தன் மிளிரும் நடிப்பால் நம்மளை எல்லாம் மனநிறைவு செய்திருக்கிறார் மோகன்லால்.

ஆர்யா கதாபாத்திரமும் மிக சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக சமுத்திரகனி SPG யின் இயக்குனராக வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்… தன் நடிப்பால் அந்த கதாபாத்திரத்தை ஒளிர செய்துவிடுகிறார் ஆர்யா. உமா பத்மநாபன் சாயிஷா தலைவாசல் விஜய் இன்னும் பல நடிகர் நடிகைகள் தங்கள் நடிப்பால் அந்த கதாபாத்திரத்தை மிளிர செய்துவிடுகிறார்கள்.

இதில் நிறைய விவசாயத்தைப் பற்றியும் மக்களுக்கு நல்ல விஷயம் செய்தால் எப்படி இருக்கும் என்று ஒரு நேர்மறையான விஷயங்களை பற்றி இந்த படம் முழுக்க இருப்பது மிகவும் சிறப்பான அம்சமாகும். இந்த படத்தை தயாரிப்பதற்கு ஒத்துழைப்பு தந்த லைகா புரோடக்சன் சுபாஸ்கரன் அவர்களுக்கு நன்றி.

இந்த திரைப்படத்திற்கு ஏன் இவ்வளவு நீண்ட ஒரு விமர்சனம்….. ஏன் என்றால் இந்த படத்தை நீங்களும் பார்த்து மகிழ வேண்டும் என்பதற்காக…

சன் டிவியில் வருகின்ற செவ்வாய்க்கிழமை பகல் 12.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. அனைவரும் கண்டுகளிக்க வேண்டுகிறேன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

September 2021
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930